menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
கங்கணகணவென கிண்கிணி

மணிகளும் ஒலிக்க ஒலிக்க

எங்கெங்கிலும் மங்களம் மங்களம்

எனும் மொழி முழங்க முழங்க

ஒரு சுயம்வரம் நடக்கிறதே..

இது சுகம் தரும் சுயம்வரமே

ஆ...ஆ..ஆ..ஆ..

பெண் : ஒரு நாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

ஒரு நாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

தனனனனனா தனனனனனா தனனனனனா

தனனனன னானானானானா

பெண் : சுட்டுவிரல் நீ காட்டு

சொன்னபடி ஆடுவேன்

உன்னடிமை நான் என்று

கையெழுத்துப் போடுவேன்

ஆண் : உன்னுதிரம் போலே நான்

பொன்னுடலில் ஓடுவேன்

உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்

பெண் : தோகை கொண்டு நின்றாடும்

தேங்கரும்பு தேகம்

ஆண் : முந்தி வரும் தேன் வாங்கிப்

பந்தி வைக்கும் நேரம்

பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு

வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

இணையான இளமானே துணையான இளமானே

இணையான இளமானே துணையான இளமானே

ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

பெண் : ஒரு நாளும் உனை

மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

ஆண் : கட்டில் இடும் சூட்டோடு

தொட்டில் கட்டு அன்னமே

முல்லைக் கொடி தரும் அந்தப்

பிள்ளைக் கனி வேண்டுமே

பெண் : உன்னை ஒரு சேய் போலே

என் மடியில் தாங்கவா

என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆண் : ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே

பெண் : ஆறு ஏழு கேட்டாலும்

பெற்றெடுப்பேன் நானே

ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று

சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

பெண் : ஒரு நாளும் உனை

மறவாத இனிதான வரம் வேண்டும்

ஆண் : உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

பெண் : விழியோடு இமை போலே

விலகாத நிலை வேண்டும்

ஆண் : இணையான இளமானே துணையான இளமானே

பெண் : ஓ..எனையாளும் எஜமானே

எனையாளும் எஜமானே

ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

Lebih Daripada S. P. Balasubrahmanyam/K. S. Chithra

Lihat semualogo