menu-iconlogo
logo

Sundari Kannaal Oru Sethi

logo
Lirik
சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

வாய் மொழிந்த வார்த்தை

யாவும் காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்து பாவை பார்த்த

காதல் இன்பம் மாயமா

ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால்

கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால்

கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

சோலையிலும் முட்கள்

தோன்றும் நானும் நீயும் நீங்கினால்

பாலையிலும் பூக்கள் பூக்கும்

நான் உன் மார்பில் தூங்கினால்

ஆ...ஆ...மாதங்களும் வாரம்

ஆகும் நானும் நீயும் கூடினால்

வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ

நீ எனை தீண்டினால்

காயங்களும் ஆறாதோ

நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்

வருவேன் அந்நாள் வரக் கூடும்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

Sundari Kannaal Oru Sethi oleh S. P. Balasubrahmanyam/K. S. Chithra - Lirik dan Liputan