menu-iconlogo
logo

Inbame Undhan Per Penmaiyo

logo
Lirik
இன்பமே..

உந்தன் பேர் பெண்மையோ...

இன்பமே....

உந்தன் பே...ர் பெண்மையோ

என் இதயக் கனி

நீ சொல்லும் சொல்லில்

மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே......

உந்தன் பேர் வள்ளலோ.....

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

உன் இதயக் கனி

நான் சொல்லும் சொல்லில்

மழலைக்கிளி

உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே.....

உந்தன் பேர் வள்ளலோ.....

சர்க்கரைப் பந்தல் நான்

தேன்மழை சிந்த வா

சர்க்கரைப் பந்தல் நான்

தேன்மழை சிந்த வா

சந்தன மேடையும் இங்கே

சாகச நாடகம் எங்கே

தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை

ஓரிரு வாழைகள் தாங்கும்

தேவதை போல் எழில் மேவிட நீ வர

நாளும் என் மனம் ஏங்கும்

இன்பமே..

உந்தன் பேர் பெண்மையோ..

பஞ்சணை வேண்டுமோ

நெஞ்சணை போதுமே

பஞ்சணை வேண்டுமோ

நெஞ்சணை போதுமே

கைவிரல் ஓவியம் காண

காலையில் பூமுகம் நாண

பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்

போரிடும் மேனிகள் துள்ள

புன்னகையோடொரு

கண்தரும் ஜாடையில்

பேசும் மந்திரம் என்ன

இன்பமே..

உந்தன் பேர் வள்ளலோ..

F. மல்லிகைத் தோட்டமோ

வெண்பனிக் கூட்டமோ..

மல்லிகைத் தோட்டமோ

வெண்பனிக் கூட்டமோ..

மாமலை மேல் விளையாடும்

மார்பினில் பூந்துகில் ஆகும்

மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்

மேகமும் வாழ்த்திசை பாடும்

மாளிகை வாசலில் ஆடிய தோரணம்

வான வீதியில் ஆடும்

இன்பமே..

உந்தன் பே...ர் பெண்மையோ

என் இதயக் கனி

நீ சொல்லும் சொல்லில்

மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

இன்பமே..

உந்தன் பேர் வள்ளலோ.....

Inbame Undhan Per Penmaiyo oleh S. P. Balasubrahmanyam/P. Susheela - Lirik dan Liputan