menu-iconlogo
logo

Meendum Meendum Vaa

logo
Lirik
பெ: மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

பால் நிலா ராத்திரி...

பாவை ஓர் மாதிரி...

அழகு ஏராளம்...

அதிலும் தாராளம்...

மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

பெ: ஆண்மை என்னும்

வார்த்தைக்கேற்ற

தோற்றம் நீதானா

தேக்கு மரத்தில்

ஆக்கி வைத்த

தேகம் இதுதானா

ஆ: செந்நிறம்

பசும்பொன்னிறம்

தேவதை வம்சமோ

சேயிடை விரல்

தீண்டினால் சந்திரன்

அம்சமோ

பெ: தொடங்க

ஆ: மெல்லத் தொடங்க

பெ: வழங்க

ஆ: அள்ளி வழங்க

பெ: இந்த போதைதான்

இன்ப கீதைதான்

அம்மம்மா... ஆஹ்...

ஆ: மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

ஆ: விரகம் போலே

உயிரை வாட்டும்

நரகம் வேறேது

சரசக் கலையைப்

பழகிப் பார்த்தால்

விரசம் கிடையாது

பெ: தேன் தரும்

தங்கப் பாத்திரம்

நீ தொட மாத்திரம்

ராத்திரி நடு ராத்திரி

பார்க்குமோ சாத்திரம்

ஆ: கவிதை

பெ: கட்டில் கவிதை

ஆ: எழுது

பெ: அந்திப் பொழுது

ஆ: கொஞ்சும் பாடல்தான்

கொஞ்சம் ஊடல்தான்

அம்மம்மா... ஹா...

பெ: மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

ஆ: மீண்டும் மீண்டும் வா...

வேண்டும் வேண்டும் வா...

பெ: பால் நிலா ராத்திரி.

பாவை ஓர் மாதிரி

ஆ: அழகு ஏராளம்.

அதிலும் தாராளம்

பெ: அழகு ஏராளம்.

அதிலும் தாராளம்

Meendum Meendum Vaa oleh S. P. Balasubrahmanyam/S. Janaki - Lirik dan Liputan