menu-iconlogo
huatong
huatong
avatar

Seermevum Gurupatham

Sirkazhi Govindarajan/N. S. Krishnanhuatong
haasbroekhuatong
Lirik
Rakaman
பாடல்: சீர்மேவும் குருபதம்

படம்: சக்கரவர்த்தி திருமகள்

பாடியவர்: என்.எஸ்.கிருஷ்ணன்,

சீர்காழி கோவிந்தராஜன்

இசை: ஜி. ராமநாதன்

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

(பல்லவி)

ஆ1: சீர்மேவும் குருபதம்

சிந்தையொடு வாக்கினும்

சிரமீது வைத்துப் போற்றி

ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி

பறக்கவிடும் வீரப்ரதாபன் நானே...

சங்கத்துப்புலவர் பலர்

தங்கத்தோட பொற்பதக்கம்

வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்

எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்

இந்த சிங்கத்துக்கு முன்னே

ஓடி பங்கப்பட்ட பலதீரர்

சீ.ரெடுத்துப் பாடிவாரேன் நேரே.

அதற்கு ஓரெழுத்துப்

பதில் சொல்லிப்பாரேன்...

ஆ2: யானையைப் பிடித்து.....

யானையைப் பிடித்து ஒரு

பானைக்குள் அடைத்து வைக்க

ஆத்திரப்படுபவர் போல் அல்லவா

யானையைப் பிடித்து ஒரு

பானைக்குள் அடைத்து வைக்க

ஆத்திரப்படுபவர் போல் அல்லவா

உமதாரம்பக்கவி சொல்லுதே புலவா

வீட்டுப். பூனைக்குட்டி

காட்டிலோடி புலியைப் பிடித்து

தின்ன புறப்பட்ட கதை போலே அல்லவா

தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

ஆ அம்ம்... அப்பறம்... ஓஹோ.. சரிதான்...

பூதானம் கன்னிகா தானம்

சொர்ண தானம் அன்ன தானம்

கோதானம் உண்டு பற்பல தானங்கள்

இதற்கு மேலான தானமிருந்தால் சொல்லுங்கள்

ஹேய்... கேள்விக்குப்பதிலக் கொண்டா

டேப்ப ஒடச்செறிவேன் ரெண்டா

ஒன்னே ஜெயிச்சுக்கட்டுவேன் முண்டா

அப்பறம் பறக்கவிடுவேன் ஜண்டா....

ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி…

பதில்ல்ல்....

ஆ சொல்றேன்...

எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம்

புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது

நிதானந்தான்

நிதா..னந்தான்.... ( ஆம்)

எத்தனை தானம் தந்தாலும்

எந்த லோகம் புகழ்ந்தாலும்

தானத்தில் சிறந்தது நிதானந்தான்

நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...

நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...

சொல்லிட்டான்.. இரு...

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?...

இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?

சிற்ப வேலைக்குப்

பெருமை உண்டு அதனாலே...

போச்சுடா...ஹஹம். சரிதான்...

அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

அன்ன சத்திரம்.... என்ன சொன்ன?

அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

பல திண்ணைதூங்கிப்

பசங்கள் இருப்பதாலே? எப்டி... ஹு.ஹும்

பரதேசியாய்

திரிவதெதனாலே..?.. ஏ.. ஏ.. ஆ...

பரதேசியாய் திரிவதெதனாலே..?

அவன் பத்து வீட்டு... ஆம்...

அஹ்ஹம். சரி இதுவேணாம்...

அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்க கவனி.. காரிருள்

சூழுவது எவ்விடத்திலே?

தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே....

அண்ணே..

கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே

சொல்லிப்புட்டியே...

புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

புகையும் நெருப்புமில்லாம

அது எப்டி எரியும்?

ஆ2: நான் சொல்லட்டுமா?

சொல்லு..

புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

பசித்து வாடும் மக்கள் வயிறு அது

பசித்து வாடும் மக்கள் வயிறு அது

சரிதான் சரிதான் சரிதான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

கத்தி.. ஆ2: இல்ல

கோடாலி... ஆ2: இல்ல

ஈட்டி... ஆ2: ம்ஹூம்

ஆம்...கடப்பாற... ஆ2: இல்ல

அதுவுமில்லையா...

அப்பறம்.. பயங்கரமான ஆயுதம்

அக்னித்திராவகமோ இருக்குமோ..

அது ஆயுதமில்லையே....

ஆம் தீயான்னும் புரியமாட்டேங்குதே..

அட நீயே சொல்லப்பா..

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின்

நாக்குத் தான் அது..

ஆஹா ஹாஹா....

நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின்

நாக்குத் தான் அது..

Lebih Daripada Sirkazhi Govindarajan/N. S. Krishnan

Lihat semualogo