menu-iconlogo
huatong
huatong
avatar

Kanna Unnai Thedukiren Vaa

S.Janakihuatong
vcuram99huatong
Lirik
Rakaman

பெண்: கண்ணா... கண்ணா... கண்ணா...

இசை பல்லவி

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா

உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை

கண்ணீர் இன்னும் ஓயவில்லை

கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா

இசை சரணம் 1

ஏன் இந்தக் காதல் என்னும்

எண்ணம் தடை போடுமா

என் பாடல் கேட்ட பின்னும்

இன்னும் பிடிவாதமா

என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை

மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை

உன்னைத் தேடி வந்தேன்

உண்மை சொல்ல வேண்டும்

இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா ( இசை )

ஆண்: கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணே இனி சோகம் இல்லை

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

இசை சரணம் 2

சோகத்தின் பாஷை என்ன

சொன்னால் அது தீருமா

கங்கை நீர் காயக் கூடும்

கண்ணீர் அது காயுமா

பெண்: சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா

மேகங்கள் போய் விடும் வானம் என்ன போகுமா

ஆண்: ஈரம் உள்ள கண்ணில்

தூக்கம் இல்லை பெண்ணே

தோகை வந்த பின்னே சோகம் இல்லையே

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

பெண்: உன்னோடு தான்

வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை

ஆண்: காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணே இனி சோகம் இல்லை

பெண்: கண்ணா உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

Lebih Daripada S.Janaki

Lihat semualogo