menu-iconlogo
logo

Yaarathu Yaarathu

logo
Lirik
ஐயம் ஸாரி

ஆஹ் நீங்களா?!

ம்ம்

ஏன் இப்படி?

உனக்காக

ம்ம்

யாரது யாரது தங்கமா?

பேரெது பேரெது வைரமா?

ஊரெது ஊரெது சொர்க்கமா?

ஊறிடும் தேனது வெட்கமா..

யாரது யாரது சிங்கமா (M: ம்ம்)

பேரெது பேரெது செல்வமா (M: ஹாஹா)

ஊரெது ஊரெது வீரமா

ஊறிடும் தேனதன் சாரமா

யாரது யாரது தங்கமா

பேரெது பேரெது செல்வமா

1…2…3…1…2…3…

லார ரம்பம், லார ரம்பம்

லார ரம்பம், லார ரம்பம்

லார ரம்பம், லார ரம்பம்

லார ரம்பம், லார ரம்பம்

கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ

கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ

கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ

தணியாத சுகம் இன்னும் தடை போடுதோ

ஆஹா…(whistle)

ஓஹோ….(whistle)

ஆஹா…(whistle)

ஓஹோ….(whistle)

யாரது யாரது தங்கமா

பேரெது பேரெது செல்வமா

ஊரெது ஊரெது சொர்க்கமா

ஊறிடும் தேனதன் சாரமா

யாரது யாரது தங்கமா

1…2…3…1…2…3…

முதிராத கனி என்ன முகமானதோ

முளைக்காத கரும்பென்ன மொழியானதோ

முதிராத கனி என்ன முகமானதோ

முளைக்காத கரும்பென்ன மொழியானதோ

சிதறாத முத்தென்ன நகை ஆனதோ

சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

யாரது யாரது தங்கமா

அணைத்தாலும் அணையாத தீபம் என்ன

அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன

மறைத்தாலும் மறையாத மாயம் என்ன

மழை போல பொழிகின்ற இன்பம் என்ன

ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்

அடங்காது அடங்காது காதல் உள்ளம்

தீராது தீராது சேரும் இன்பம்

தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

ஆஹா…(whistle)

ஓஹோ….(whistle)

ஆஹா…(whistle)

ஓஹோ….(whistle)

யாரது யாரது தங்கமா

பேரெது பேரெது செல்வமா

யாரது யாரது தங்கமா

Yaarathu Yaarathu oleh Tm Soundararajan/P. Susheela - Lirik dan Liputan