menu-iconlogo
logo

Athikai kai kai

logo
Lirik
அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண் அல்லவோ நீ

என்னைப்போல் பெண் அல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

ஓஓஓஓஓஓ... ஓஓஓஓஓஓ...

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக் காய்

மங்கை எந்தன் கோவைக் காய்

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக் காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங் காய் ஆனாலும்

என்னுளங் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண் அல்லவோ

ஓஓஓஓஓஓ... ஆஆஆஆஆஆ....

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னை போல் பெண்ணல்லவோ நீ

என்னை போல்பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

என்னுயிரும் நீயல்லவோ

ஆஹாஹாஆஆ....

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

சாதிக்காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

சாதிக்காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூது வழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண் அல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஆஹாஹாஆஆ....

உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்

வெண்ணிலவே சிரிக்காயோ

உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதை எனைக் காயாதே

கொற்றவரைக்காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையில் ஏங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய்காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஆஹாஹாஆஆ....

ஓஹோஹோ ஓஓ..

ம்ம்ம்ம்ம்....

Athikai kai kai oleh Tm Soundararajan/PB Srinivas/P. Susheela/Jamuna Rani - Lirik dan Liputan