menu-iconlogo
huatong
huatong
unnikrishnansujathapa-vijaysirpy-sil-sil-sil-sillala-cover-image

Sil Sil Sil Sillala

Unnikrishnan/Sujatha/Pa. Vijay/Sirpyhuatong
tumanviblhuatong
Lirik
Rakaman
சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நீ மின்னலா

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா...

உன் கண்கள் கூர் வாளா

நீ சாரலா இசை தூறலா..

பூஞ்சோலையானவளா...

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நான் மின்னலா..?

நீயிருக்கும் நாளில் எல்லாம்

இமயத்தின் மேலே இருப்பேன்

நீயுமிங்கு இல்லா நாளில்

என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து

வன்முறையில் இறங்குகிறாய்

சிற்பமே என்னடி மாயம்

சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே..

நாமும் வாழலாம்...

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நீ மின்னலா

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நான் மின்னலா..?

என்னையே நானும் மறந்தேன்

உன்னையே நீயும் மறந்தாய்

மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை

சொன்னால் உலகமே தலையாட்டும்

நம்மைப் போல் காதலர் பார்த்தால்

தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நீ மின்னலா

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா..

உன் கண்கள் கூர் வாளா..

நீ சாரலா இசை தூறலா

பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நான் மின்னலா

சில் சில் சில் சில்லல்லா

சொல் சொல் நீ மின்னலா..?

Lebih Daripada Unnikrishnan/Sujatha/Pa. Vijay/Sirpy

Lihat semualogo