menu-iconlogo
huatong
huatong
a-m-rajah-masila-unmai-kadhale-cover-image

Masila Unmai Kadhale

A. M. Rajahhuatong
nealpedowitzhuatong
Letra
Gravações
ஆ:மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே,

பெ:பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

ஆ:கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே.....

ஆ:நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெ:நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

ஆ:நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெ:நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே..

ஆ:கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே....

ஆ:உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெ:இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே..

ஆ:உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெ:இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

இருவரும்:அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாறுமோ.....

Mais de A. M. Rajah

Ver todaslogo