தாய்ப்பாலும் தண்ணீரும்
ஒன்னாதான் இருந்துச்சு
விலை இல்லாம கெடந்துச்சு
ஆனா இப்போ எல்லாமே
தலைகீழா போனுச்சு
தடம் மாறி நின்னுச்சு
நிலவுல தண்ணீரு
இருக்கானு தேடுறோம்.
ராக்கெட்டை ஏவுறோம்
குடிநீரை பூமியில
வியாபாரம் பண்ணுறோம்
ஆறிருக்கும் பக்கத்துல
ஊரு உருவாகுச்சு
வரலாறு சொல்லுச்சு
ஊரு மட்டும் இருக்குதய்யா
ஆற மட்டும் காணல.
போன இடம் தெரியல
பரவ நட்ட காடுகளை பாவிசனம் அடிக்குதே
நன்றி மறந்து சிரிக்குதே
ஆறறிவ வெச்சுக்கிட்டு ஆணவத்தில் வாழுதே
மண்ணை போல தண்ணீருக்கும் எல்லைக்கோட்டை போடுற
வறுமைக்கோட்டை வளர்க்குற
இயற்கைதான் கூட்டிவச்சு பொம்மையாக பாக்குற
அடிமையாக்க நினைக்கிற
இப்படியே போனாக்கா பூச்சி இங்கே வாழும் டா
புழுவும் இங்கே வாழும் டா
மனுச பையன் இனம் மட்டும் மண்ணாகி போகும் டா
By
🙏🏻🎊LoveQueen👑Family🎊🙏🏻