'தேனிசை தென்றல்' தேவா அவர்களுக்கு
கோடான கோடி நன்றி
இந்த அழகிய பாடலை பாடி
நம்மை மகிழ்வித்த
திருமதி.அனுராதா ஸ்ரீராம் அவர்களுக்கும்
திரு.ஹரிஹரன் அவர்களுக்கும் நன்றி
ஆண்: என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே...
ஹே... ஹே... என் மனதை கொள்ளையடித்தவளே...
ப ப ப... ப ப..
என் வயதை கண்டுபிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விடும்
மனத்தந்தியை படித்.தேன்
வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
கண்டேன் உன்னைத்தான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்
ஆண்: மூச்சை போல உனை தானே
இங்கு தினம் வாங்கும் இந்த நுரையீரல்
நீ இல்லாமல் இருந்தாலே
இந்த நுரையீரல் ஒரு குறையீரல்
பெண்: நிதம் நிதம்தான் காதல் யாகம்
நிகழ்ந்திடத்தான் கேட்கும் தேகம்
ஆண்: நீங்காமல் நெஞ்சில் இருக்கு
உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு
அஹ்ஹ ஆஹா ஆஹா...
பெண்: என் மனதை கொள்ளையடித்தவனே
என் வயதை கண்டு பிடித்தவனே
பெண்: ஏப்ரல் மாதம் கொதித்தாலும்
உன்னை அணைத்தாலே அது டிசம்பர்தான்
டிசம்பர் மாதம் குளிர்ந்தாலும்
உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல்தான்
ஆண்: உனக்கெனத்தான் தோழி தோழி
உருகுகிறேன் நீண்ட நா.ழி...
பெண்: நீ தீண்ட கூச்சம் பிறக்கும்
கொஞ்ச நேரம் செல்ல
நீ கேட்கும் மோட்சம் திறக்கும்
ஆண்: ஸு ப..ப் பப்பா...பப்பா..
என் மனதை கொள்ளையடித்தவளே...
ஹோ…என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விடும்
மனத்தந்தியை படித்.தேன்..
வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
பெண்: கண்டேன் உன்னைத்தான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்
ஆண்: அம்மம் அம்மம்மா....
ஹய்யோ... அம்மம் அம்மம்மா....
பெண்: ஹய்யோ... ஹய்யையையோ...
ஹய்யோ... ஹய்யோ... ஹய்யையையோ...