ஆ: கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தெனம் பொங்கிவரும் நீரோட்டமே
நீ கேட்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாடி வாடி மானே
பெ: ராசா என் ராசாக்கண்ணு
உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு
உன்னோட ஒன்னா நின்னு
தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு
ஆ: மாலைக்கும் மாலை
ஏன் மாமன் பொண்ணு சேலை
அழைக்கும் வேளை அசத்தும் ஆள
பெ: சேலைக்கும் மேல
நான் சேர்ந்திருக்கும் சோலை
கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ
ஆ: நீ கூறும் வேளை
இனி வேறேது வேலை
பெ: ஏ..மாமன் தோள
தெனம் நான் சேரும் மாலை
ஒண்ணு தாங்க கூரச்சேலை
ஆ: காலம் சேர்ந்ததும்
மாலை மாத்தணும்
காதல் கதை சொல்லி
போதை ஏத்தணும்
வாடி வாடி மானே
பெ: ராசா ஏன் ராசாக்கண்ணு
உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு
உன்னோட ஒன்னா நின்னு
தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு
பெ: உள்ளத்துக்குள்ள
நீ சொன்ன கதை நூறு
நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு
ஆ: கண்ணுக்குள் உன்ன
நான் கட்டி வச்சேன் பாரு
கலைப்பதாரு பிரிப்பதாரு
பெ: தேனோட பாலும்
தெனம் நான் ஊட்ட வேணும்
ஆ: பூவான வானம்
அதில் போயாட வேணும்
இனி மேலே என்ன வேணும்
பெ: நாளும் பொழுதெல்லாம்
ஒன்னை நெனைக்கிறேன்
தனியா படுத்துத் தான்
சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போல
ஆ: கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தெனம் பொங்கிவரும் நீரோட்டமே
பெ: நீ கேட்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாங்க வாங்க ராசா
ஆ: கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பெ: ராசா என் ராசாக்கண்ணு
உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு