menu-iconlogo
logo

Thamarai Kannangal

logo
Letra
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது

பொங்கிடும் எண்ணங்கள்..

மாலையில் சந்தித்தேன்

மய்யலில் சிந்தித்தேன்

மாலையில் சந்தித்தேன்

மய்யலில் சிந்தித்தேன்

மங்கை நான் கன்னித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

கைகளை மன்னித்தேன்

மாலையில் சந்தித்தேன்…..

கொத்து மலர் குழல் பாதம்

அளந்திடும் சித்திரமோ

ஆ..ஆ..ஆ…

முத்து நகை தரும்

மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ

ஆ..ஆ…

கொத்து மலர் குழல் பாதம்

அளந்திடும் சித்திரமோ

ஆ..ஆ..ஆ..

முத்து நகை தரும்

மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ

துயில் கொண்ட வேளையிலே

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

மாலையில் சந்தித்தேன்

மய்யலில் சிந்தித்தேன்

மங்கை நான் கன்னித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

ஆலிலை மேலொரு

கண்ணனைப்போல் இவன் வந்தவனோ

நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ

ஆலிலை மேலொரு

கண்ணனைப்போல் இவன் வந்தவனோ

நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ

சுமை கொண்ட பூங்கொடியின்

சுவை கொண்ட தேன் கனியை

உடை கொண்டு மூடும்போது ..

உறங்குமோ உன்னழகு..

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது

பொங்கிடும் எண்ணங்கள்..

மாலையில் சந்தித்தேன்

மய்யலில் சிந்தித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

கைகளை மன்னித்தேன்....

Thamarai Kannangal de P. B. Sreenivas – Letras & Covers