menu-iconlogo
huatong
huatong
avatar

Chinna Chinna Kannile

P. Susheela/A.M. Rajahhuatong
ice3creamhuatong
Letra
Gravações

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்

அங்கும் இங்கும் யார் வரவை தேடுது

துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்

அங்கும் இங்கும் யார் வரவை தேடுது

துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை

வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில்

புள்ளி மயில் பள்ளிக்கொண்டதோ

அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை

வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில்

புள்ளி மயில் பள்ளிக்கொண்டதோ

புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை

அள்ளிக்கொண்டு போகலாகுமோ – நீயும்

கள்வனாக மாறலாகுமா

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்

அங்கும் இங்கும் யார் வரவை தேடுது

துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

பின்னி வைத்த கூந்தலில்

முல்லை பூவை சூடினால்

கன்னி நடை பின்னல் போடுமா – சிறு

மின்னலிடை பூவை தாங்குமா

பின்னி வைத்த கூந்தலில்

முல்லை பூவை சூடினால்

கன்னி நடை பின்னல் போடுமா – சிறு

மின்னலிடை பூவை தாங்குமா

மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே

அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்

அதில் அந்தி பகல் பள்ளிக்கொள்ளுவேன்

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்

அங்கும் இங்கும் யார் வரவை தேடுது

துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்

அங்கும் இங்கும் யார் வரவை தேடுது

துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

Mais de P. Susheela/A.M. Rajah

Ver todaslogo