menu-iconlogo
huatong
huatong
avatar

aattama therottama captain prabhakar

Raagamhuatong
RisingStar2543232huatong
Letra
Gravações
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்

ஆடுறேன் வலை போடுறேன்

பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்

அம்மா பொண்ணு ரம்பாதான்

சம்பா ரம்பா சம்பாதான்

ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்

ஆடுறேன் வலை போடுறேன்

பாடுறேன் பதில் தேடுறேன்

ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி

ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி

யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி

அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி

ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...

பூ வாசம் வட்டம் போடுது

வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட

மாராப்பு மெல்ல தொட்டது

பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ

புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ

கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..

ஏ ரம்பா சம்பா சம்பாதான்

அம்மா பொண்ணு ரம்பாதான்

சம்பா ரம்பா சம்பாதான்

ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு

நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு

நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு

நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு

கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்

கையாலே பொட்டு வைக்கவா

பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்

தாளங்கள் சொல்லி தட்டவா

பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா

போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா

கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்

ஆடுறேன் வலை போடுறேன்

பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்

அம்மா பொண்ணு ரம்பாதான்

சம்பா ரம்பா சம்பாதான்

ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

Mais de Raagam

Ver todaslogo