menu-iconlogo
huatong
huatong
avatar

Naan unna nenachen by rashi

Rashihuatong
𝓡𝓪𝓼𝓱𝓲𝓣𝓻𝓪𝓿𝓮𝓵𝓫𝓲𝓻𝓭huatong
Letra
Gravações
Hq track by rashi

ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்

நீ என்ன நெனச்சே

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நம்ம யாரு பிரிச்சா

ஒரு கோடு கிழிச்சா

ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு

ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு

நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு

அது மாயம் என்றாச்சு

ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்

நீ என்ன நெனச்சே

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

ஆண் : நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு

நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு

நித்தம் நித்தம் பூத்தாயே

நான் பறிச்ச ரோசாவே

இனிமே எப்ப வரும் பூவாசம்

செல்லம்மா என்னம்மா சொல்லம்மா

ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்

நீ என்ன நெனச்சே

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

பெண் : அப்போ வந்து வாங்கித்தந்தே

பூ சேல

நீ எப்போ வந்து போடப்போறே பூமாலே

அம்மன் சிலை இங்கேதான்

ஆடித் தேரு அங்கேதான்

இருந்தா கோயில் குளம் ஏனைய்யா

செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா

ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்

நீ என்ன நெனச்சே

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

பெண் : மாடு மனை எல்லாம் உண்டு என்னோட

என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட

உன்னத்தொட்டு நான் வாரேன்

என்னவிட்டு ஏன் போறே

நிழல்போல் கூட வந்தா ஆகாதோ

செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா

ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்

நீ என்ன நெனச்சே

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்

பெண் : நீ என்ன நெனச்சே

பெண் : தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

ஆண் : நம்ம யாரு பிரிச்சா

பெண் : ஒரு கோடு கிழிச்சா

பெண் : ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு

ஆண் : ஒன்னாலத்தானே

பல வண்ணம் உண்டாச்சு

பெண் : நீ இல்லாமத்தானே

பெண் : அது மாயம் என்றாச்சு

ஆண் : அது மாயம் என்றாச்சு

ஆண் : நான் ஒன்ன நெனச்சேன்

நீ என்ன நெனச்சே

தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

Mais de Rashi

Ver todaslogo