menu-iconlogo
logo

Kaathal Vaibhogame

logo
Letra
காதல் வைபோகமே காணும்

நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்

ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

காதல் வைபோகமே காணும்

நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்

ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

கோடை காலத்து தென்றல்

குளிரும் பௌர்ணமி திங்கள்

வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டு பாட

மலைகள் பொன் ஊஞ்சல் போட

நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட

பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால்

கதகதப்பு துடிதுடிப்பு

இது கல்யாண பரபரப்பு

காதல் வைபோகமே காணும்

நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்

ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

எண்ணம் என் எண்ண வண்ணம்

இளமை பொன்னென்று மின்னும்

எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம்

மேகலை பாடிடும் ராகம்

ராகங்கள் பாடிடும் தேகம்

தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம்

வாழ்ந்தால் உந்தன் மடியில்

வளர்ந்தால் உந்தன் அருகில்

அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்

ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

காதல் வைபோகமே

காணும் நன்னாளிதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

லல லாலா லாலாலலா

லல லாலா லாலாலலா

Kaathal Vaibhogame de S. Janaki/Malaysia Vasudevan – Letras & Covers