menu-iconlogo
huatong
huatong
avatar

Pattu Kannam

S. P. Balasubrahmanyam/P. Susheelahuatong
stephanecardinalhuatong
Letra
Gravações
பட்டுக்கன்னம்

தொட்டுக்கொள்ள

ஒட்டிக்கொள்ளும்

ஒட்டிக்கொண்டு

கட்டிக்கொள்ள

உள்ளம் துள்ளும்

தென்றல் வந்து

உன்னைக்கண்டு

மெல்ல மெல்ல

ராகம் ஒன்று

பாடுதம்மா..ஹோ..ஹோய்

பட்டுக்கன்னம்

தொட்டுக்கொள்ள

ஒட்டிக்கொள்ளும்

ஒட்டிக்கொண்டு

கட்டிக்கொள்ள

உள்ளம் துள்ளும்

நீல நதிக்கரை ஓரத்தில்

நின்றிருந்தேன் ஒரு நாள்

உந்தன் பூவிதழ் ஈரத்தில்

என்னை மறந்திருந்தேன் பல நாள்

வானத்து மீன்களை மேகம்

மறைத்தது போல் தினமும்

எந்தன் மோகத்தை நாணத்தில்

மூடி மறைத்திருந்தேன் மனதில்

நாணம் யாவும் நூலாடை

நானே உந்தன் புது மேலாடை

மங்கை இவள் அங்கங்களில்

உங்கள் கரம் தொடங்கலாம்

நாடகமே..ஹோ... ஹோய்

பட்டுக்கன்னம்

தொட்டுக்கொள்ள

ஒட்டிக்கொள்ளும்

ஒட்டிக்கொண்டு

கட்டிக்கொள்ள

உள்ளம் துள்ளும்

தென்றல் வந்து

உன்னைக்கண்டு

மெல்ல மெல்ல

ராகம் ஒன்று

பாடுதம்மா...ஹோ..ஹோய்

பட்டுக்கன்னம்

தொட்டுக்கொள்ள

ஒட்டிக்கொள்ளும்

ஒட்டிக்கொண்டு

கட்டிக்கொள்ள

உள்ளம் துள்ளும்

கற்பனை கொஞ்சிடும்

காவியச்சந்தங்களே அடடா

இந்த காவியக் கோவிலைப்

பார்த்து எழுதியதோ தலைவா

புன்னகை சிந்திடும் பூந்தமிழ்

ஓவியமே...கிளியே..

உந்தன் பூவுடல் பார்த்தபின்

சிற்பம் வடித்தனரோ கனியே

ஆசைத்தீயை தூண்டாதே

போதைப் பூவை தினம் தூவாதே

அந்தியிலே வெள்ளி நிலா

அள்ளித்தரும் சுகங்களே

ஆயிரமே....ஹோ..ஹோய்.....

பட்டுக்கன்னம்

தொட்டுக்கொள்ள

ஒட்டிக்கொள்ளும்

ஒட்டிக்கொண்டு

கட்டிக்கொள்ள

உள்ளம் துள்ளும்

தென்றல் வந்து

உன்னைக்கண்டு

மெல்ல மெல்ல

ராகம் ஒன்று

பாடுதம்மா.....ஹோ...ஹோய்

பட்டுக்கன்னம்

தொட்டுக்கொள்ள

ஒட்டிக்கொள்ளும்

ஒட்டிக்கொண்டு

கட்டிக்கொள்ள

உள்ளம் துள்ளும்

Mais de S. P. Balasubrahmanyam/P. Susheela

Ver todaslogo