menu-iconlogo
logo

Devan kovil mani osai

logo
Letra
தேவன் கோவில் மணி ஓசை

நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை

தேவன் கோவில் மணி ஓசை

நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை

பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்

பாசத்தின் ஓசை மணி ஓசை

தேவன் கோவில் மணி ஓசை

நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்

உதவும் கோவில் மணி ஓசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்

உதவும் கோவில் மணி ஓசை

தாயார் வடிவில் தாவி அணைத்தே

தழுவும் நெஞ்சின் மணி ஓசை

இது உறவினைக் கூறும் மணி ஓசை

இவன் உயிரினைக் காக்கும் மணியோசை

தேவன் கோவில் மணி ஓசை

நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை

அருமை மகனே என்றொரு வார்த்தை

வழங்கும் கோவில் மணி ஓசை

அருமை மகனே என்றொரு வார்த்தை

வழங்கும் கோவில் மணி ஓசை

அண்ணா அண்ணா என்றோர் குரலில்

அடங்கும் கோவில் மணி ஓசை

இது ஆசைக் கிழவன் குரல் ஓசை

அவன் அன்பினைக் காட்டும் மணி ஓசை

தேவன் கோவில் மணி ஓசை

நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை

பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்

பாசத்தின் ஓசை மணி ஓசை