menu-iconlogo
huatong
huatong
avatar

Thoongatha Kannendru

Tm Soundararajan/P. Susheelahuatong
petitefiancehuatong
Letra
Gravações
(பெ)தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீ என்னை கண்டு

(ஆ)தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீ என்னை கண்டு

(பெ)தூங்காத கண்ணென்று ஒன்று

(ஆ)முற்றாத இரவொன்றில் நான் வாட‌

முடியாத கதையொன்றை நீ பேச‌

முற்றாத இரவொன்றில் நான் வாட‌

முடியாத கதையொன்றை நீ பேச‌

(பெ)உற்றாரும் காணாமல்

உயிரொன்று சேர்ந்தாட‌

உண்டாகும் சுவையென்று ஒன்று

உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட‌

உண்டாகும் சுவையென்று ஒன்று

(ஆ)தூங்காத கண்ணென்று ஒன்று

(பெ)யார் என்ன சொன்னாலும் செல்லாது

அணை போட்டு தடுத்தாலும் நில்லாது

யார் என்ன சொன்னாலும் செல்லாது

அணை போட்டு தடுத்தாலும் நில்லாது

(ஆ)தீராத விளையாட்டு திரைபோட்டு விளையாடி

நாம் காணும் உலகென்று ஒன்று

தீராத விளையாட்டு திரைபோட்டு விளையாடி

நாம் காணும் உலகென்று ஒன்று

(பெ)தூங்காத கண்ணென்று ஒன்று

(ஆ)வெகு தூரம் நீ சென்று நின்றாலும்

விழி மட்டும் தனியாக வந்தாலும்

வெகு தூரம் நீ சென்று நின்றாலும்

உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்

(பெ)வருகின்ற விழியொன்று

தருகின்ற பரிசென்று

பெருகின்ற சுகமென்று ஒன்று

வருகின்ற விழியொன்று

தருகின்ற பரிசென்று

பெருகின்ற சுகமென்று ஒன்று

(ஆ)தூங்காத கண்ணென்று ஒன்று

(பெ) ஆ.... ஆ...

(ஆ)துடிக்கின்ற சுகமென்று ஒன்று

(பெ) ஆ.... ஆ...ஆ...

(ஆ)தாங்காத மனமென்று ஒன்று

(பெ) ஆ.... ஆ...ஆ...

(ஆ)தந்தாயே நீ என்னை கண்டு

(ஆ)தூங்காத கண்ணென்று ஒன்று

Mais de Tm Soundararajan/P. Susheela

Ver todaslogo