படம் : தாயை காத்த தனயன்
இசை : கே.வி. மகாதேவன்
பாடியவர்கள் : TMS, , பி.சுசீலா
பதிவேற்றம் :
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
பஞ்சவர்ணக் கிளியிருக்கு
பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு
நெருங்கி வந்தால் சுகமிருக்கு
பஞ்சவர்ணக் கிளியிருக்கு
பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு
நெருங்கி வந்தால் சுகமிருக்கு
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பதிவேற்றம் :
என்னம்மோ போலிருக்கு
எப்படியோ மனசிருக்கு
ஆஹா .….
வெள்ளம் போல் நினைவிருக்கு
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ம்ஹூம்….
என்னம்மோ போலிருக்கு
எப்படியோ மனசிருக்கு
வெள்ளம் போல் நினைவிருக்கு
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன் அச்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன் அச்சம் இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை
கண் கலந்தால் வார்த்தை இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை
கண் கலந்தால் வார்த்தை இல்லை
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பதிவேற்றம் :
மேளங்கள் முழங்கி வரும்
மேடை என்னை அழைக்க வரும்
ம்ஹூம்……
மாலை மணம் சூட வரும்
மங்கல நாளும் தேடி வரும்
ம்ஹூம்…..
மேளங்கள் முழங்கி வரும்
மேடை என்னை அழைக்க வரும்
மாலை மணம் சூட வரும்
மங்கல நாளும் தேடி வரும்
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி வரும்
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி வரும்
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
பஞ்சவர்ணக் கிளியிருக்கு
பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு
நெருங்கி வந்தால் சுகமிருக்கு
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு