menu-iconlogo
huatong
huatong
avatar

THAIPALUM THANNEERUM

Chandi Veeranhuatong
𒀼⃝🧿'𝐌𝐠𝐫👑𝐓𝐨𝐝𝐚𝐲💕🕊͡➴huatong
Тексты
Записи
தாய்ப்பாலும் தண்ணீரும்

ஒன்னாதான் இருந்துச்சு

விலை இல்லாம கெடந்துச்சு

ஆனா இப்போ எல்லாமே

தலைகீழா போனுச்சு

தடம் மாறி நின்னுச்சு

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...

நிலவுல தண்ணீரு

இருக்கானு தேடுறோம்.

ராக்கெட்டை ஏவுறோம்

குடிநீரை பூமியில

வியாபாரம் பண்ணுறோம்

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...

ஆறிருக்கும் பக்கத்துல

ஊரு உருவாகுச்சு

வரலாறு சொல்லுச்சு

ஊரு மட்டும் இருக்குதய்யா

ஆற மட்டும் காணல.

போன இடம் தெரியல

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...

பர வனவத்த காடுகளை பாவிசனம் அடிக்குதே

நன்றி மறந்து சிரிக்குதே

ஆறறிவ வெச்சுக்கிட்டு ஆணவத்தில் வாழுதே

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...

மண்ணை போல தண்ணீருக்கும் எல்லைக்கோட்டை போடுற

வறுமைக்கோட்டை வளர்க்குற

இயற்கைதான் கூட்டிவச்சு பொம்மையாக பாக்குற

அடிமையாக்க நினைக்கிற

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...

இப்படியே போனாக்கா பூச்சி இங்கே வாழும் டா

புழுவும் இங்கே வாழும் டா

மனுச பையன் இனம் மட்டும் மண்ணாகி போகும் டா

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...

கோடி கோடி கடன வாங்கி வெறும் கையை நீட்டுகிறான்

வெளிநாடு ஓடுகிறான்

ஏர் பிடிச்ச கைகளை தான் எட்டி தானே மிதிக்கிறான் தூக்கில் தொங்க வைக்கிறான்

ம்ம் ம்ம்

போதுமடா போதுமடா சாமி

இங்கு பாலா போச்சுது இந்த பூமி×2

ம்ம் ம்ம்...

ஊருக்கே சோறு போட்ட விவசாயி சாகிறான்

ஒருகை அரிசி வாங்க வரிசையிலே நிற்கிறான்

வரிசையிலே நிற்கிறான்!!

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...

இத்தனை கொடுமைகளை பார்க்கும் உங்கள் கண்கலே

கல்மனம் கரையலியோ நாகரீக நெஞ்சிலே

ம்ம் ம்ம்...

உங்க நாகரீக நெஞ்சிலே...

ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்...ம்ம் ம்ம்ம்ம் ம்ம்.....

Еще от Chandi Veeran

Смотреть всеlogo