menu-iconlogo
logo

Thenkizhakku

logo
Тексты
தென்கிழக்கு தேன் சிட்டு

செம்பருத்திப்பூ மொட்டு

செல்லங்கொஞ்சுதே தாலாட்ட

எத்தனையோ காலம் வாராத வானவில்

வந்தது போல் நீ பேச

உச்சியில நீந்தும் ஆகாச மீன் என

துள்ளிடுதே உன் ஆச

மழை அடிக்கும் உன் சிரிப்பில்

செடி மொளைக்கும் நான் பூவாக

வெயில் அடிக்கும் நாள் வரைக்கும்

கொட புடிப்பேன் உன் தாயாக

நீ நீ சொல்லும் கத

நான் நான் கேட்கும் வர

நாமாவோம் மாயப் பறவைகளே

தென்கிழக்கு தேன் சிட்டு

செம்பருத்திப்பூ மொட்டு

செல்லங்கொஞ்சுதே தாலாட்ட

ஒத்தையில போகும் வெட்டவெளி மேகம்

மெட்டெடுத்து பாடாதோ றெக்க விரிச்சு

சித்தறும்பு போடும் நட்சத்திரக் கோலம்

சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு

தெரிஞ்சே நீ செய்யும் சேட்ட

தெளிவாக உன்ன காட்ட

அதில் கோடி ராகம் நானும் மீட்ட

தெருவெங்கும் தேர ஓட்ட

மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட

பெறுகாதோ காலம் வேகம் கூட்ட

பனங்கறுக்கும் பால் சுரக்கும்

அத நெனச்சே நீ கெண்டாடு

பசி மறக்கும் நாள் பிறக்கும்

வலி மறந்தே நீ கூத்தாடு

பனங்கறுக்கும் பால் சுரக்கும்

அத நெனச்சே நீ கெண்டாடு

பசி மறக்கும் நாள் பிறக்கும்

வலி மறந்தே நீ கூத்தாடு

(பனங்கறுக்கும்) நீ நீ சொல்லும் கத

(பால் சுரக்கும்) நான் நான் கேட்கும் வர

(அத நெனச்சே நீ கெண்டாடு) நாமாவோம் மாயப் பறவைகளே

(பசி மறக்கும்) நீ நீ சொல்லும் கத

(நாள் பிறக்கும்) நான் நான் கேட்கும் வர

(வலி மறந்தே நீ கூத்தாடு) நாமாவோம் மாயப் பறவைகளே

பனங்கறுக்கும் பால் சுரக்கும்

வலி மறந்தே நீ கூத்தாடு

Thenkizhakku от Dhee - Тексты & Каверы