menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே

உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது

பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்

உன் வாழ்க்கையிலே இனி மௌனம் குதிக்கும்

உன் தேவதையை நீ காணும் வரைக்கும்

பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே

உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

ஒற்றை வார்த்தை பேசும் போதும்

கற்றை கூந்தல் மோதும் போதும்

நெற்றி பொட்டில் காய்ச்சல் வந்து குடியேறும்

நண்பனோடு இருக்கும் போதும்

தன்னந்தனிமை நெஞ்சம் தேடும்

அங்கும் இங்கும் கண்கள் தேடி தடுமாறும்

கண்ணோடும் கனவோடும் யுத்தம் ஒன்று வந்திடுமே

கண்ணீரை தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே

காதல் என்றும் கடலை போலே கரையை யாரும் கண்டதில்லை

காதல் கையில் மாட்டி கொண்டால் அய்யோ பிடிக்கும் பைத்தியமே

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே

உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

காற்றில் கையை வீசிட தோன்றும்

மேகம் பார்த்து பேசிட தோன்றும்

காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே

நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும்

நடக்கும் போதே பறந்திட துடிக்கும்

காதலுக்கு காதல் செய்ய தெரியாதே

பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை

நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை

கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால் இதயம் வாழ முடியாதே

தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல் கதவை திறந்திடுமே

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே

உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது

பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

Еще от Harry Harlan/N.R. Raghunanthan

Смотреть всеlogo
Kadhal Vandhu от Harry Harlan/N.R. Raghunanthan - Тексты & Каверы