menu-iconlogo
huatong
huatong
ilaiyarajasjanaki-valli-valli-ena-cover-image

Valli Valli Ena

Ilaiyaraja/S.Janakihuatong
rdeleonmadhuatong
Тексты
Записи
வள்ளி வள்ளி என வந்தான்

வடிவேலன் தான்

புள்ளி வைத்து புள்ளி போட்டான்

புது கோலம்தான்

சொல்லித்தர சொல்லிக் கேட்டு

தினமும் சொல்லித்தந்த சிந்து பாடினான்

வள்ளி இன்ப வள்ளி என்று

தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்

வள்ளி வள்ளி என வந்தான்

வடிவேலன் தான் ஓ ஓ..

புள்ளி வைத்து புள்ளி போட்டான்

புது கோலம்தான்

சொல்லால் சொல்லாதது

காதல் சுகம் சொல்லில் நில்லாதது

கண்ணால் உண்டானது

கைகள் தொட இந்நாள் ஒன்றானது

வண்ணப்பூ வஞ்சிப்பூ

வாய்வெடித்த வாசப்பூ

அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா?

இந்தப்பூ சின்னப்பூ

கன்னிப்போகும் கன்னிப்பூ

வண்டுதான் வந்துதான் தட்டுமா?

என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்

நாணல் போல தேகம் தன்னில்

நாணம் என்னம்மா

வள்ளி வள்ளி என வந்தான்

வடிவேலன் தான்...

புள்ளி வைத்து புள்ளி போட்டான்

புது கோலம்தான்

சொல்லித்தர சொல்லிக் கேட்டு

தினமும் சொல்லித்தந்த சிந்து பாடினான்

வள்ளி இன்ப வள்ளி என்று

தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்

வள்ளி வள்ளி என வந்தான்

வடிவேலன் தான்...

புள்ளி வைத்து புள்ளி போட்டான்

புது கோலம்தான்

Еще от Ilaiyaraja/S.Janaki

Смотреть всеlogo