பொம்பள இல்லாம நீதான்
இங்கு என்ன செய்ய முடியும் மாமா
பொம்பள இல்லாம நீதான்
இங்கு என்ன செய்ய முடியும் மாமா
சட்டை துவைக்கவும் தொட்டுத் தேய்க்கவும்
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்
என்ன வேணும் எண்ணிப்பாரு மாமா
கன்னிப்பொண்ணு வேணும்
சொல்லிப்புட்டேன் ஆமா
பொம்பள துணை எனக்கு வேணாம்
வாய பொத்திக்கிட்டு அந்தப் பக்கம் போடி
பொம்பள துணை எனக்கு வேணாம்
வாய பொத்திக்கிட்டு அந்தப் பக்கம் போடி
கெண்டைக் காலயும் கொண்டை பூவையும்
கண்டு மயங்குற காளை நானில்லை
அடி எட்டிக்கொஞ்சம் தள்ளி நில்லு மானே
இல்ல எக்குதப்பா ஆகிப்போகும் வீனே
திரைப்படம்
மருதுபாண்டி
இசை
இசைஞானி
பாடியவர்கள்
மனோ எஸ்.ஜானகி
பாடல் பதிவு
ஆடி ஓடி வேலை செஞ்சா காலு கையி நோகுமே
அங்க இங்க நானும் தொட்டு..
கையவெச்சா தீருமே
ஹேய்..தெம்பிருக்கு வேலை செய்ய
ஓஞ்சதில்ல நானம்மா
வந்து வந்து வம்பிழுக்கும்..
வேலை இப்ப வேணுமா
விளக்கு ஏத்தவும் கொஞ்சி குறைக்கவும்
வேணும் பொம்பள..
நானெடுத்து ஏத்திவெச்சா
விளக்கு என்ன எரியாதா..
ஏத்திவெச்ச என்னோட கைதான்
இறக்கி வைக்க முடியாதா..
அந்த கஷ்டம் ஆம்பளைக்கெதுக்கு
அதுதான் பொம்பளைக்கு
பொம்பள துணை எனக்கு வேணாம்
வாய பொத்திக்கிட்டு அந்தப் பக்கம் போடி
ஆ..ங்
பொம்பள துணை எனக்கு வேணாம்
வாயபொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி,போடி
இசை
பெண் ஆசையால் சாபம் வாங்கி
போனானம்மா இந்திரன்
பூமி மேல ஆசைவச்சு.. தேஞ்சானம்மா சந்திரன்
எல்லாருக்கும் சாபம் தீர்க்க
உள்ள இடம் பொம்பள
உங்களுக்கு ஏதுமில்ல.. ஆராலும் நீ ஆம்பள
பருவ கிறுக்கில பட்ட பகலுல
கனவில் மிதக்கிற
மருதுபாண்டி பேரையும் சொல்ல
மகனும் பொறக்க வேணாமா
உன் மகன தாங்க அம்மா நான்தான்
மனச கொஞ்சம் தா மாமா
யம்மா யம்மா சொன்னது சரிதான்
நாளொன்னு பார்ப்போமா
க்..கும் பொம்பள இல்லாம நீதான்
இங்கு என்ன செய்ய முடியும் மாமா
பொம்பள இல்லாம யாரும்
இங்கு என்ன செய்ய முடியும் வாமா
சட்டை துவைக்கவும் தொட்டுத் தேய்க்கவும்
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்
பொண்ணு ஒன்னு வேணுமடி மானே
நீ சொன்னதெல்லாம் ஒத்துக்கிட்டேன் நானே
பொம்பள இல்லாம நீதான்
இங்கு என்ன செய்ய முடியும் மாமா
நன்றி வணக்கம்