menu-iconlogo
logo

Yaar Azhuthu Yaar Thuyaram

logo
Тексты
யார் அழுது யார் துயரம் ஆறும்?

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்?

உன் காதில் விழாதோ என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

யார் அழுது யார் துயரம் ஆறும்?

யார் பிரிவை யார் தடுக்க கூடும்?

நீ தந்த பாசம் என் காதல் நேசம்

எல்லாமும் இன்று மாயங்களா?

நீ தந்த பாசம் என் காதல் நேசம்

எல்லாமும் இன்று மாயங்களா?

கங்கை நீர் கூட தீயாகும்

எங்கே என் சோகம் மாறும்

கங்கை நீர் கூட தீயாகும்

எங்கே என் சோகம் மாறும்?

நீ போன பாதை நான் தேடும் வேலை

என் கண்ணனே என் நெஞ்சின் சோக ராகம்

யார் அழுது யார் துயரம் ஆறும்?

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்?

இன்பங்கள் என்று நாம் தேடி சென்று

துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்

இன்பங்கள் என்று நாம் தேடி சென்று

துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்

பாசம் நாம் போட்ட நீர் கோலம்

பந்தம் தான் வாழ்வின் துன்பம்

பாசம் நாம் போட்ட நீர் கோலம்

பந்தம் தான் வாழ்வின் துன்பம்

தாயென்னும் தெய்வம் சேய் வாழத்தானே

என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

யார் அழுது யார் துயரம் ஆறும்?

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்?

உன் காதில் விழாதோ

என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

யார் அழுது யார் துயரம் ஆறும்?

யார் பிரிவை யார் தடுக்க கூடும்?

Yaar Azhuthu Yaar Thuyaram от Jayachandran/S Janaki - Тексты & Каверы