வளர்ந்த கலை மறந்துவிட்டாள்
கேளடா கண்ணா, அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா...
வளர்ந்த கலை மறந்துவிட்டாள்
கேளடா கண்ணா, அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா...
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு
ஏனடா கண்ணா...
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு
ஏனடா கண்ணா...
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா.. அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா....
காதல் சொன்ன பெண்ணை இன்று
காணுமே கண்ணா..
காதல் சொன்ன பெண்ணை இன்று
காணுமே கண்ணா..
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி விட்டாள்
ஏனடா கண்ணா..
காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா..
அந்த காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா..
அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான்
ஏனடா கண்ணா...
மனதில் அன்றே எழுதி வைத்தேன்
தெரியுமா கண்ணா.. அதை
மறுபடியும் எழுத சொன்னால்
முடியுமா.. கண்ணா...
மனதில் அன்றே எழுதி வைத்தேன்
தெரியுமா கண்ணா.. அதை
மறுபடியும் எழுத சொன்னால்
முடியுமா.. கண்ணா...