ஆ: கல்தோன்றி மண்தோன்று
முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும்
கன்னி இளமையிலே
சொல்லோடு பொருளேந்தி
விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே
நின் திருவடிகள் வாழ்க
பெ: பொதிகை மலை உச்சியிலே
புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வானேறி
தவழ்ந்து வரும் நிலவே
மதியறியாச் சிறு மகளும்
கவிபாட வந்தேன்
மன்றத்தில் துணைநின்று
வாழ்துவாய் தாயே
ஆ:ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக- நீ
அறிந்தவற்றை மறைந்து
நின்று சபையினிலே தருக
ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக- நீ
அறிந்தவற்றை மறைந்து
நின்று சபையினிலே தருக
பெ:பெண் கவியை வெல்லவந்த
பெருமகனே வருக- உங்கள்
பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக
பெண் கவியை வெல்லவந்த
பெருமகனே வருக- உங்கள்
பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக
இலை இல்லாமல் பூத்த
மலர் என்ன மலரம்மா?
இலை இல்லாமல் பூத்த
மலர் என்ன மலரம்மா?
பெ:அது இளமை பொங்க
வீற்றிருக்கும் கன்னி மலரய்யா
அது இளமை பொங்க
வீற்றிருக்கும் கன்னி மலரய்யா
ஆ:வலைஇல்லாமல் மீனை
பிடிக்கும் தேசம் என்ன தேசம்?
வலைஇல்லாமல் மீனை
பிடிக்கும் தேசம் என்ன தேசம்?
பெ:அது வாலிபரின் கண்ணிலுள்ள
காதல் என்னும் தேசம்
அது வாலிபரின் கண்ணிலுள்ள
காதல் என்னும் தேசம்
ஆ:ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக-
பெ:உங்கள் பெட்டகத்தை திறந்து
வைத்து பொருளை அள்ளி தருக
ஆ:காதல் வந்தால் மேனியிலே
என்ன உண்டாகும்?
பெ:அது கன்னியரை கண்டவுடன்
கால்கள் தள்ளாடும்
ஆ:காதலித்தாள் மறைந்துவிட்டால்
வாழ்வு என்னாகும்?
பெ:அன்பு காட்டுகின்ற வேறிடத்தில்
காதல் உண்டாகும்
ஆ:ஒருமுறை தான் காதல் வரும்
தமிழர் பண்பாடு
பெ: அந்த ஒன்று எது என்பதுதான்
கேள்வி இப்போது
ஆ:வருவதெல்லாம் காதலித்தால்
வாழ்வதெவ்வாறு?
பெ:தன் வாழ்க்கையையே
காதலித்தால்
புரியும் அப்போது
ஆ:ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக-
பெ:உங்கள் பெட்டகத்தை திறந்து
வைத்து பொருளை அள்ளி தருக
பெ:தாதி தூது தீது தத்தும்
தத்தை சொல்லாது ஆ:(ஆஹ்)
தூதி தூது ஒத்தித்தது
தூது செல்லாது ஆ:( என்னது)
தேது தித்து தொத்து தீது
தெய்வம் வராது ஆ:(ஓஹ்ஓஹ்....)
இங்கு துத்தி தத்தும் தத்தை
வாழ தித்தித்ததோது
பெ:அடிமை தூது பயன்படாது
கிளிகள் பேசாது
அன்பு தோழி தூதுசென்றால்
விரைவில் செல்லாது
பெ:அடிமை தூது பயன்படாது
கிளிகள் பேசாது
அன்பு தோழி தூதுசென்றால்
விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது
நின்றால் பயனிருக்காது
தெய்வத்தையே தொழுது
நின்றால் பயனிருக்காது
இளம் தேமல் கொண்ட
கன்னி வாழ இனியது கூறு
இளம் தேமல் கொண்ட
கன்னி வாழ இனியது கூறு
பெ:பெண் கவியை வெல்லவந்த
பெருமகனே வருக- உங்கள்
பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக