menu-iconlogo
huatong
huatong
avatar

Neeyum Naanum Anbe

Raghu Dixithuatong
peggideewhuatong
Тексты
Записи
நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்

அன்பே நீயே போதும்

இமைகள் நான்கும் போர்த்தி

இதமாய் நாம் தூங்கலாம்

நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை சென்று

ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ

என் பாதம் நீ

நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ

என் பூமி நீ

என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ

என் பாதம் நீ

நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ

என் பூமி நீ

என் ஆதி அந்தம் நீயடி

ஓ நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை சென்று

ஒன்றாக வாழலாம்

தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில்

உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்

மின்மினி பூவே உன் காதல் கண்ணில்

புதிதாய் கண்டேனே என்னை உன்னில்

தாமதமாய் உன்னை கண்ட பின்னும்

தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை சென்று

ஒன்றாக வாழலாம்

உன் தேவையை நான் தீர்க்கவே

வெண்ணீரில் மீனாய் நீந்துவேன்

உன் காதலை கடன் வாங்கியே

என்னை நானே தாங்குவேன்

உன் பாதியும் என் மீதியும்

ஒன்றே தான் என்று வாழ்கிறேன்

உன் கண்களில் நீர் சிந்தினால்

அப்போதே செத்து போகிறேன்

சாலை ஓர பூக்கள்

சாய்ந்து நம்மை பார்க்க

நாளை தேவை இல்லை பெண்ணே

நாளும் வாழலாம்

ஓ நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை சென்று

ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ

என் பாதம் நீ

நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ

என் பூமி நீ

என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ

என் பாதம் நீ

நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ

என் பூமி நீ

என் ஆதி அந்தம் நீயடி

ஓ நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை சென்று

ஒன்றாக வாழலாம்

ஓ நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை சென்று

ஒன்றாக வாழலாம

Еще от Raghu Dixit

Смотреть всеlogo
Neeyum Naanum Anbe от Raghu Dixit - Тексты & Каверы