menu-iconlogo
huatong
huatong
avatar

Santhaikku Vantha Kili

S Janaki/S P Balasubramanyamhuatong
spendlovemarhuatong
Тексты
Записи
ஆ: சந்தைக்கு வந்த கிளி...

ஜாடை சொல்லி பேசுதடி...

சந்தைக்கு வந்த கிளி...

ஜாடை சொல்லி பேசுதடி...

முத்தம்மா முத்தம்மா...

பக்கம் வர வெட்கமா...

முத்தம்மா முத்தம்மா...

பக்கம் வர வெட்கமா...

குத்தாலத்து மானே...

கொத்து பூவாடிடும் தேனே...

குத்தாலத்து மானே...

கொத்து பூவாடிடும் தேனே...

சந்தைக்கு வந்த கிளி...

ஜாடை சொல்லி பேசுதடி...

சந்தைக்கு வந்த கிளி...

ஜாடை சொல்லி பேசுதடி...

ஆ: காணாத காட்சி எல்லாம்...

கண்டேனே உன்னழகில்...

பூ போல கோலமெல்லாம்...

போட்டாயே உன் விழியில்...

பெ: மானா மதுரையிலே...

மல்லிகை பூ வாங்கி வந்து...

மை போட்டு மயக்கினியே...

கை தேர்ந்த மச்சானே

ஆ: தாமரையும் பூத்திருச்சு...

தக்காளி பழுத்திருச்ச...

தங்கமே உன் மனசு...

இன்னும் பழுக்கலையே..

பெ: இப்பவே சொந்தம் கொண்டு நீ...

கையில் அள்ளிக்கொள்ளு மாமா...

சந்தைக்கு வந்த மச்சான்...

ஜாடை சொல்லி பேசுவதேன்...

சந்தைக்கு வந்த மச்சான்...

ஜாடை சொல்லி பேசுவதேன்...

சொல்லவா சொல்லவா...

ஒண்ணு நான் சொல்லவா...

சொல்லவா சொல்லவா...

ஒண்ணு நான் சொல்லவா...

கல்யாணத்தை பேசி...

நீ கட்ட வேணும் தாலி...

கல்யாணத்தை பேசி ...

நீ கட்ட வேணும் தாலி...

சந்தைக்கு வந்த மச்சான்...

ஜாடை சொல்லி பேசுவதேன்...

சந்தைக்கு வந்த மச்சான்...

ஜாடை சொல்லி பேசுவதேன்...

பெ: ஆளான நாள் முதலாய்...

உன்னைத்தான் நான் நினைச்சேன்...

நூலாகத்தான் இளைச்சு...

நோயில் தினம் வாடி நின்னேன்...

ஆ: பூ முடிக்கும் கூந்தலிலே...

எம் மனசை நீ முடிச்சே...

நீ முடிச்ச முடிப்பினிலே...

என் உசுரு தினம் தவிக்க...

பெ: பூவில் நல்ல தேனிருக்கு...

பொன் வண்டு பார்த்திருக்கு...

இன்னும் என்ன தாமதமோ...

மாமனுக்கு சம்மதமோ...

ஆ: இப்பவே சொந்தம் கொள்ளவே...

கொஞ்சம் என் அருகில் வாம்மா...

சந்தைக்கு வந்த கிளி...

ஜாடை சொல்லி பேசுதடி...

பெ: சந்தைக்கு வந்த மச்சான்...

ஜாடை சொல்லி பேசுவதேன்...

ஆ:முத்தம்மா முத்தம்மா...

பக்கம் வர வெட்கமா...

பெ: சொல்லவா சொல்லவா...

ஒண்ணு நான் சொல்லவா...

கல்யாணத்தை பேசி...

நீ கட்ட வேணும் தாலி...

ஆ: ஓ..ஹொய்..குத்தாலத்து மானே...

கொத்து பூவாடிடும் தேனே...

இருவரும்: தந்தன்னா தந்தானன்னே...

தானதந்த தானேனானே...

தந்தன்னா தந்தானன்னே...

தானதந்த தானேனானே...

Еще от S Janaki/S P Balasubramanyam

Смотреть всеlogo
Santhaikku Vantha Kili от S Janaki/S P Balasubramanyam - Тексты & Каверы