குழு : ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பெய்ய
ஏத்துக்கோ ஆடை உலை காய
ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பெய்ய
ஏத்துக்கோ ஆடை உலை காய
பெண்:என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே
பெண் : தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே இனிப்பாயே
பெண் : விழி தொடும் திசையே
விரல் தொடும் கணையே
உடல் தொடும் உடையே இணைவாயே
பெண் : யாவும் நீயாய் மாறிப் போக
நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும்
காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்
குழு : ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தாடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா