தானானே னானானே னானானேனா 
தானானே னானானே 
தானானே னானானே னானானேனா 
தானானே னானானே 
  அழகே நீ அழகாக என்னை கொய்தாய் 
அடி நெஞ்சில் ஏதோ செய்தாய் 
உயிரே நீ உயிருக்குள் காதல் பெய்தாய் 
உனக்குள் என் உலகம் செய்தாய் 
எனக்குள் இருக்கும் காதலே நான் சொல்லிட தவிக்கிறேன் 
நீ மட்டும் போதும் எனக்கென்று நான் வாழ்ந்திட துடிக்கிறேன் 
தானானே னானானே னானானேனா தானானே னானானே 
தானானே னானானே னானானேனா தானானே னானானே 
  ஒற்றை நொடியில் என்னை உடைத்தாய் நீயே 
உடைந்த என்னை மீண்டும் படைத்தாய் நீயே 
மனதை குடைந்து காதல் வரைந்தாய் நீயே 
மழையாய் மாறி எனக்குள் நிறைந்தாய் நீயே 
காதல் யாசகம் கேட்கின்றேன் 
என்னை நான் பாவமாய் பார்க்கின்றேன் 
உன்னாலே தலை சுற்றி போகின்றேன் 
என் முன்னே நான் சாக பார்க்கின்றேன் 
அழகே நீ அழகாக என்னை கொய்தாய் 
அடி நெஞ்சில் ஏதோ செய்தாய் 
உயிரே நீ உயிருக்குள் காதல் பெய்தாய் 
உனக்குள் என் உலகம் செய்தாய் 
எனக்குள் இருக்கும் காதலே நான் சொல்லிட தவிக்கிறேன் 
நீ மட்டும் போதும் எனக்கென்று நான் வாழ்ந்திட துடிக்கிறேன் 
  இமையால் பேசி உந்தன் இதயம் நேசி 
மௌனம் கொண்டு எந்தன் காதலை வாசி 
நிழலாய் இரு நீ எந்தன் நினைவாய் இரு நீ 
காதலில் மட்டும் எந்தன் உயிராய் இரு நீ 
உள்ளங்கால் ரேகையாய் நானும்தான் 
உன்னோடு வருகின்றேன் பாரடி 
என் காதல் மெய்தானா என்பதை 
உன்னோடு தெய்வத்த கேளடி 
அழகே நீ அழகாக என்னை கொய்தாய் 
அடி நெஞ்சில் ஏதோ செய்தாய் 
உயிரே உயிருக்குள் காதல் பெய்தாய் 
உனக்குள் என் உலகம் செய்தாய்