menu-iconlogo
huatong
huatong
spb-hits-senguruvi-senguruvi---aravind-cover-image

Senguruvi Senguruvi - ARAVIND

SPB Hitshuatong
❖𒆜💗𝜟𝜸𝜶𝝂𝒊𝜼𝜹💗𒆜❖huatong
Тексты
Записи
Senguruvi Senguruvi Song Lyrics in Tamil

ஆண் : சிறுவாணி தண்ணியபோல்…

சிளுசிளுனு சிரித்திருக்கும்…

கடையாணி சக்கரம் போல்…

கண்ணிரெண்டும் சுத்திவரும்…

ஆண் : மருதானி சிவப்பாட்டம்…

மணிகண்ணம் மின்னி வரும்…

மகராசி அழகை எல்லாம்…

மலர்காத்து பாடி வரும்…

—BGM—

ஆண் : செங்குருவி செங்குருவி…

காரமட செங்குருவி…

சேலகட்டி மாமனுக்கு…

மாலையிட்ட செங்குருவி…

குழு : செங்குருவி செங்குருவி…

காரமட செங்குருவி…

சேலகட்டி மாமனுக்கு…

மாலையிட்ட செங்குருவி…

ஆண் : ஒத்திகைக்குப் போவமா…

ஒத்துமையா ஆவமா…

குழு : முத்திரைய போடம்மா…

முத்தமிட்டு பாடம்மா…

ஆண் : வெக்கமெல்லாம் மூட்டகட்டி…

வச்சா என்ன ஓரமா…

பெண் : செங்குருவி செங்குருவி…

காரமட செங்குருவி…

சேலகட்டி மாமனுக்கு…

மாலையிட்ட செங்குருவி…

—BGM—

ஆண் : வெண் பருத்தி நூலெடுத்து…

வாய் வெடிச்ச பூவெடுத்து…

நான் அணிஞ்சிட தொடுத்து வச்ச…

நளினமான மாலையிது…

குழு : தன தனன‌னா தனன‌னா…

தன தனன‌னா தனன‌னா…

பெண் : சென்னிமல தேனெடுத்து…

செங்கரும்பின் சாறெடுத்து…

நீ பருகிட கலந்து வச்ச…

நெருக்கமான வேளையிது…

குழு : தன தனன‌னா தனன‌னா…

தன தனன‌னா தனன‌னா…

ஆண் : ஆ… ராசாத்தி ஒடம்பிருக்கும்…

ரவிக்க துணி நானாக…

அன்னாடம் சூடிக்கொள்ள…

ஆச வச்சா ஆகாதா…

பெண் : ஆத்தாடி மறைஞ்சிருக்கும்…

அழகையெல்லாம் நீ பாத்தா…

ஏம்மானம் ரெக்க கட்டி…

எட்டுத்திக்கும் போகாதா…

ஆண் : அடி சீனி சக்கரையே…

எட்டி நீயும் நிக்கிறியே…

நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ…

ராங்கு பண்ணுறியே…

குழு : செங்குருவி செங்குருவி…

காரமட செங்குருவி…

சேலகட்டி மாமனுக்கு…

மாலையிட்ட செங்குருவி…

—BGM—

பெண் : கள்ளழகர் வைகையிலே…

கால் பதிக்கும் வேளையிலே…

பால் நிலவில் படுத்திகிட்டு…

பருவராகம் பாடனுமே…

குழு : தன தனன‌னா தனன‌னா…

தன தனன‌னா தனன‌னா…

ஆண் : சொக்கனுக்குப் பக்கத்திலே…

சோடி என்று வந்தவளே…

நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு…

நெனச்ச தாளம் போடனுமே…

குழு : தன தனன‌னா தனன‌னா…

தன தனன‌னா தனன‌னா…

பெண் : ஆனாலும் உனக்கு ரொம்ப…

அவசரம்தான் மாமாவே…

ஒன்னாக கூடும்போது…

ஊர் முழுக்கப் பாக்காதா…

ஆண் : பாத்தாலும் தவறு இல்ல…

பனி உறங்கும் ரோசாவே…

முன்னால சோத்த வச்சா…

மூக்குலதான் வேக்காதா…

பெண் : என்ன வாட்ட எண்ணுறியே…

கைய கோத்து பின்னுறியே…

உன் பாட்டப் பாடி பலவிதமா…

சேட்ட பண்ணுறியே…

ஆண் : செங்குருவி செங்குருவி…

காரமட செங்குருவி…

சேலகட்டி மாமனுக்கு…

மாலையிட்ட செங்குருவி…

குழு : செங்குருவி செங்குருவி…

காரமட செங்குருவி…

சேலகட்டி மாமனுக்கு…

மாலையிட்ட செங்குருவி…

பெண் : ஒத்திகைக்குப் போவமா…

ஒத்துமையா ஆவமா…

குழு : முத்திரைய போடலாம்…

முத்தமிட்டு பாடலாம்…

ஆண் : வெக்கமெல்லாம் மூட்டகட்டி…

வச்சா என்ன ஓரமா…

குழு : செங்குருவி செங்குருவி…

காரமட செங்குருவி…

சேலகட்டி மாமனுக்கு…

மாலையிட்ட செங்குருவி…

Еще от SPB Hits

Смотреть всеlogo