உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்
எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்
உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ
உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ
மயங்குகிறேன் மயங்குகிறேனா
உன் அருகில் தயங்குகிறேனே
நான் பெண்ணானதேனோ
உன் கை சேரத்தானோ
உணருகிறேன் உணருகிறேனா
உன் அழகில் உலருகிறேனே நான்
ஆணானது ஏனோ
உன் உயிர் சேரத்தானோ
ஓ பெண் நிலவே மறையாதே
என் காதல் என்றும் மாறாதே
என் உறவே பிரியாதே
என் ஆருயிரே...
யார் இவளோ
அந்த பிரம்மன் கவிதை குரலோ
நீ ரசிகன்
என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ
உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்
எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்
உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ...
உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ