menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி சேரவேண்டும்

கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

கன்னி நீ இன்னும் ஏன்

நாண வேண்டும்

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி சேரவேண்டும்

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி சேரவேண்டும்

கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

கன்னி நீ இன்னும் ஏன்

நாண வேண்டும் இம்ம்ம்ம்

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாட்டில் சுவை இருந்தால்

ஆட்டம் தானே வரும்

கேட்கும் இசை விருந்தால்

கால்கள் தாளமிடும்

பாட்டில் சுவை இருந்தால்

ஆட்டம் தானே வரும்

கேட்கும் இசை விருந்தால்

கால்கள் தாளமிடும்

தன்னை மறந்தது பெண்மை

துள்ளி எழுந்தது பதுமை

தன்னை மறந்தது பெண்மை

துள்ளி எழுந்தது பதுமை

நூல் அளந்த இடை தான் நெளிய

நூறு கோடி விந்தை புரிய

நூறு கோடி விந்தை புரிய

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாதம் சிவந்திருக்கும்

பாவை செந்தாமரை

பார்வை குனிந்திருக்கும்

புருவம் மூன்றாம்பிறை

புத்தம் புது மலர் செண்டு

தத்தி நடமிட கண்டு

புத்தம் புது மலர் செண்டு

தத்தி நடமிட கண்டு

மேடை வந்த தென்றல் என்றேன்

ஆடை கொண்ட மின்னல் என்றேன்

ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி சேரவேண்டும்

கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

கன்னி நீ இன்னும் ஏன்

நாண வேண்டும்

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

Еще от T. M. Soundararajan/M. S. Viswanathan

Смотреть всеlogo