menu-iconlogo
logo

Unnai Kanum Neram

logo
Тексты
உன்னை காணும் நேரம் நெஞ்சம்

ராகம் பல நூறு பாடும் தினம்தோரும்

காலம் நேரம் ஏதும் இல்லை

உன்னை காணும் நேரம் நெஞ்சம்

கண்ணில் மின்னும் காதல் ஜோதி

கன்னி மேனி மானின் ஜாதி

கண்கள் சொல்லும் காமன் சேதி

கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்

திருநாளில் நாணம் தீரும்

ஒரு மாலை தோளில் சேரும்

திருநாளில் நாணம் தீரும்

தொட வேண்டி கைகள் ஏங்கும்

பட வேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்

போதும் இடைவேளை

மீதி இனி நாளை

மாலை வேளை வீணாய் போகும்

இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னை கண்டால் போதும்

பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

மன்னா உன்னை மார்பின் தாங்கும்

பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

மடி மீது சாயும் சாபம்

தர வேண்டும் ஆயுள் காலம்

மடி மீது சாயும் சாபம்

தர வேண்டும் ஆயுள் காலம்

பல கோடி காலம் வாழ...

பனி தூவி வானம் வாழ்த்தும்

உன்னை காணும் நேரம் நெஞ்சம்

ராகம் பல நூறு

பாடும் தினம்தோரும்

காலம் நேரம் ஏதும் இல்லை

உன்னை காணும் நேரம் நெஞ்சம்

Unnai Kanum Neram от Yesudas/Vani Jairam - Тексты & Каверы