அழகி பாடலையும் தமிழ்
வரிகளையும் உங்களுக்காக
வளங்குவது உங்கள்
அன்பு ரசிகன்
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
மாமனோட.. ஹேய்.. மாமனோட
மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
அன்புடன் ரசிகன்
அக்காளின் மகளுக்குக்
கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்ப அல்லாடிக் கிடக்குற
ஆசையை நான் முடிப்பேன்
விரும்பியது இந்நேரம் கிடைக்குற
போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது
எல்லோர்க்கும் நினைத்தது
போலே மண வாழ்க்கை வாய்த்திடாது
எப்போதும் ஒருவனை எண்ணித் தவித்தேன்
இப்போது நானதைக் கண்டுபிடித்தேன்
கெட்டி மேளம் கேட்கும்
நேரம் கூட.. மாமனோட..
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை.மாமனோட.
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
காப்பி குடிச்சிட்டு வாங்க
பொன்னான நகைகளும்
மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு
நன்றியை நானுரைப்பேன்
எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள்
கூடும்.. விழி ஓரம் ஈரமாகும்
கல்யாணக் கனவுகள் யாவும்
கையில் சேரும் நேரமாகும்
பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
வண்டாட்டம் பறந்திடும் வஞ்சி மனதும்
மஞ்சத் தாலி மார்பில்
ஊஞ்சலாட.. மாமனோட..
ஹேய்.. மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை.. மாமனோட..
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
உங்கள் வரவுக்கு நன்றி
THANKS FOR JOINING