menu-iconlogo
huatong
huatong
avatar

தங்கம் பெரிதென்று

பி.சுசீலாhuatong
🍟🎤🎤Rajee,🎤🎤🍟huatong
เนื้อเพลง
บันทึก
S1: ஆறு வயல் காடு அங்கமெல்லாம் தங்க நகை

சேரும் உறவினங்கள் செல்வமெல்லாம் இருந்தாலும்

வாழுகின்ற வாழ்க்கை வளமாமோ திருமுருகா

சீராற் கணவனைப்போல் சிறப்பா...மோ

வேல் முருகா...வேல் முருகா....

தங்கம் பெரிதென்று நினைந்தேன் முருகா

தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

தங்கம் பெரிதென்று நினைந்தேன் முருகா

தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா

மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா

உன்னிலும் உயர்வென்று உணர்ந்தேன் முருகா

என் மன்னவன் உன்னிலும் உயர்வே முருகா..

S2:தங்கம் பெரிதென்று நினைந்தேன் முருகா

தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

உங்கள் Rajee

இசை தாய் சாம்ராஜ்யம்

S2: வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்

ஆஅ..ஆஅ..ஆ...

வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்

இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால்

வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்

இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால்

சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம்

சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம்

தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்..

தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்..

தங்கம் பெரிதென்று நினைந்தேன் முருகா

தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

இசை

S1: ஆறுபடை வீடும் அருகருகே வந்தாலும்

மங்கை என் படை வீடு

மணந்தவன் தான் திருமுருகா

எத்தனைதான் குங்குமம் உன்

சந்நிதியில் இருந்தாலும்

எத்தனைதான் குங்குமம் உன்

சந்நிதியில் இருந்தாலும்

அத்தானின் குங்குமம் போல்

ஆவதுண்டோ வேல்முருகா

என் அத்தானின் குங்குமம் போல்

ஆவதுண்டோ வேல் முருகா.... வேல் முருகா...

இசை

S1: பொன்னகையை நினைந்து புன்னகை இழந்தேனே

பூச்சரங்கள் சேர்த்துப் பூவினை மறந்தேனே

கண்ணகியாள் பிறந்த மண்ணில் பிறந்தேனே

கண் அவன் என்று சொல்லும் கணவனைப் பிரிந்தேனே

S2: ஆலயத்துச் சிலை எனக்கு அசையாதோ திருமுருகா

ஓலமிடும் மணியோசை உதவாதோ வேல் முருகா

S1: தாலிக்கு வேலி நீ தாராயோ தனி முருகா

வேல் வந்து என்னைக் காவாதோ தமிழ் முருகா

Both: முருகா வருக..மயிலே வருக..

பெண்: வேலே..வருக

வருக..வருக...வருக...

เพิ่มเติมจาก பி.சுசீலா

ดูทั้งหมดlogo