வணக்கம்
படம் பார்திபன் கனவு
நாயகன் ஜெமினி கணேசன்
நாயகி வைஜெயந்தி மாலா
இசை வேத்பால் வர்மா
இதய வானின்
உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய் ?
ஒளியில்லாத உலகம் போல
உள்ளம் இருளுதே
என் உள்ளம் இருளுதே
கண்கள் செய்த
பாபம் உன்னை
கண்டும் காணாதேங்குதே
கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்துக் கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே
பாவி நெஞ்சம் துடிக்குதே
இதய வானின்
உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய் ?
பாடலின் நிறைவில் எங்களின்
உழைப்பை தட்டிக்கொடுக்க
நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு
பச்சை நிற தம்ஸ் அப்பும்
இப்பாடலை உயிரோட்டமாக
வைத்திருக்க உதவும்!
உங்களுடன் இப்பாடலை
பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி
அடைகிறோம் ️ உங்களின்
அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும்
மனமார்ந்த நன்றி
இருளகற்றும்
ஒளியென்றென்னை
எண்ணும் நீ யாரோ ?
எண்ணும் நீ யாரோ ?
இருளகற்றும்
ஒளியென்றென்னை
எண்ணும் நீ யாரோ?
எண்ணும் நீ யா ரோ?
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ?
காதல் கண்களோ?
இதய வானின்
உதய நிலவே
எங்கே போகிறேன்
நான் எங்கே போகிறேன்
ஆசை நெஞ்சின்
நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே
அணைக்க உன்னை நீளுதே
பறந்து வந்து
உன்னைத் தழுவ
பறந்து வந்து
உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே
பாழும் சிறகு இல்லையே
இதய வானின்
உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்?
நன்றி இப்பாடலுடன்
இனைந்ததற்க்கும் பகிர்வதற்க்கும்
மீண்டும் சந்திப்போம்