F:லா ல லா ல லா லா ல லா ல லா லா..
M:நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது..
F:நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
M:ஆஅ…ஆஆ ..ஆஆ.ஆ .ஆ .அ .ஆ .ஆ…….
M:பாவை உந்தன் கூந்தல் இன்று
போதை வந்து ஏற்றும் போது
பாத்து பாத்து ஏங்கும்
நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
F:பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை
M:காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை.
F:கூடினேன் கொண்டாடினேன்
என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன்
உன் தாகம் தீர்க்கலானேன்
M:பாலும் தெளிதேனும் பறிமாற நேரம் வந்ததே
F:நான் என்பதுநீ அல்லவோ தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது
தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது
M:நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
F:ஆசை கொண்ட காதல் கண்கள்
காண வந்த பாடல் என்ன
ஆடுகின்ற கோதை நெஞ்சில்
கூடுகின்ற கூடல் என்ன
M:நாளும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது
Fதோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது
M:அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
F:போதும் இது போதும் இளம்
பூவை மேனி தாங்குமா...
M:நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
F:இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
M:தேவலோகம் வேறு ஏது
F: தேவன் இங்கு உள்ள போது
M:வேதம் ஓது..
F:நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா
M:இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி