menu-iconlogo
logo

Vasalile Poosani Poo

logo
เนื้อเพลง
வாசலிலே பூசணிப்பூ

வச்சிப்புட்டா வச்சிப்புட்டா

நேசத்திலே எம்மனச

தச்சிப்புட்டா தச்சிப்புட்டா

பூவும் பூவும்

ஒண்ணு கலந்தது இப்போது

தேனும் பாலும்

பொங்கி வழியுது இப்போது

வாசலிலே பூசணிப்பூ

வச்சதென்ன வச்சதென்ன

நேசத்திலே எம்மனச

தச்சதென்ன தச்சதென்ன

பிரித்த போதும் பிரியவில்லையே சொந்தம் நானே

வலிய மறந்த குயிலும் சேர்ந்தது

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னிமானே

கோடு நமக்கு யாரு போட்டது

நெஞ்சுக்குள்ள நஞ்சை வச்சி

உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்

நெத்தியிலே பொட்டு வச்சி

உங்களத்தான் தொட்டுகிட்டேன்

நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா

நாளும் நாளும் சந்தோசம்

ராகம் தாளம் சேரும் நேரம்

ஆனந்தம் பாடும் சங்கீதம்

வாசலிலே பூசணிப்பூ

வச்சிப்புட்டா வச்சிப்புட்டா

நேசத்திலே எம்மனச

தச்சதென்ன தச்சதென்ன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு

மோகத்தோடு கூடிப் பாடுது

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கேட்டுக் கேட்டு கெரங்கத் தோணுது

உங்க பாட்டு

கேள்வி போல என்னை வாட்டுது

ஆத்து வெள்ளம் மேட்டவிட்டு

பள்ளத்துக்கு ஓடி வரும்

ஆசையிது தேடிக்கிட்டு

ஆனந்தமாய்ப் பாடி வரும்

எதோ ஒண்ண சொல்லிச் சொல்லி என்ன இப்போ கிள்ளாதே

போதும் போதும் கண்ணால் என்ன

கட்டி இழுக்கிற செண்பகமே

வாசலிலே பூசணிப்பூ

வச்சதென்ன வச்சதென்ன

நேசத்திலே எம்மனச

தச்சதென்ன தச்சதென்ன

பூவும் பூவும்

ஒண்ணு கலந்தது இப்போது

தேனும் பாலும்

பொங்கி வழியுது இப்போது

வாசலிலே பூசணிப்பூ

வச்சிப்புட்டா வச்சிப்புட்டா

நேசத்திலே எம்மனச

தச்சிப்புட்டா தச்சிப்புட்டா

Vasalile Poosani Poo โดย Jayachandran&S Janaki/S. P. Balasubrahmanyam/S. Janaki – เนื้อเพลง & คัฟเวอร์