menu-iconlogo
logo

Ulavum Thendral

logo
เนื้อเพลง
உலவும் தென்றல் காற்றினிலே

ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே

உலவும் தென்றல் காற்றினிலே

ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே

அலைகள் வந்து மோதியே

ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே

அலைகள் வந்து மோதியே

ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே

உயர்ந்த மலையும் உமது

அன்பின் உயர்வை காட்டுதே

உயர்ந்த மலையும் உமது

அன்பின் உயர்வை காட்டுதே

இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே

இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே

தெளிந்த நீரை போன்ற தூய

காதல் கொண்டோம் நாம்

தெளிந்த நீரை போன்ற தூய

காதல் கொண்டோம் நாம்

களங்கம் அதிலும் காணுவாய்

களங்கம் அதிலும் காணுவாய்

கவனம் வைத்தே பார்

குதர்க்கம் பேசி என்னை

மயக்க எங்கு கற்றீறொ

குதர்க்கம் பேசி என்னை

மயக்க எங்கு கற்றீறொ

உனது கடைக்கண் பார்வை

காட்டும் பாடம் தண்னிலே

உனது கடைக்கண் பார்வை

காட்டும் பாடம் தண்னிலே

உலக வாழ்க்கை ஆற்றினிலே

காதல் என்னும் தோணி

தன்னில் தூது செல்லுவோம்

உலக வாழ்க்கை ஆற்றினிலே

காதல் என்னும் தோணி

தன்னில் தூது செல்லுவோம்