பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
அலைபோலவே விளையாடுமே!
சுகம் நூறாகுமே!
மண்மேலே!
துள்ளும் மான்போலே!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
என்னாளும் நம்மைவிட்டு
போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம்
விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம்சோலை
பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை
பாளைவிடும் நாளை
கையிரண்டில் அள்ளிக்கொண்டு
காதோரம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
அலைபோலவே விளையாடுமே!
சுகம் நூறாகுமே!
மண்மேலே!
துள்ளும் மான்போலே!
ஆளான சிங்கம் ரெண்டும்
கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும்
தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே!
உயிர் சுமந்தாயே!
எங்களால் தாயே!
உயிர் சுமந்தாயே!
கந்தலிலே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே!
எங்கள் தாயே!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
அலைபோலவே விளையாடுமே!
சுகம் நூறாகுமே!
மண்மேலே!
துள்ளும் மான்போலே!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!
பிள்ளை நிலா!
இரண்டும் வெள்ளை நிலா!