ஆ: நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா..ஆ..ஆஆ
திருக்கோவிலே ஓடி வா..
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா..ஆ..ஆஆ
திருக்கோவிலே ஓடி வா..
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா.. ஆ..
வேரின்றி மலரே ஏதம்மா
நினைவாலே சிலை செய்து
உனக்கா..க வைத்தேன்
திருகோவிலே.. ஓடி வா..
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ்,
வாணி ஜெயராம்
முழுப்பாடலும் சரியான அசல்
வடிவில் பதிவிடப்படுகிறது.
பெ: அய்யா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்..ம்ம்..
தப்பாத தாளங்கள்
அய்யா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போது..ம்ம்..
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்...
கன்னத்தில் கோலங்கள்
ஆண்:செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம்.. நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நான் ஏறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா
பெ: ஆ... ஆ...
திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருகோவிலே.. ஓடி வா..
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
இதை பதிவிறக்கவோ மீள் பதிவேற்றம்
செய்யவோ வேண்டாம் . நன்றி!
ஆ:முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த..
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
பெ: என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பா..டி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பா...டி
செவ்வானம் ஆனேன்
உனை தேடித் தே..டி
திருக்கோவிலே ஓடி வா
ஆ: ஆ... ஆ...
திருக் கோவிலே ஓடி வா..
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா..
பெ: ஆ..ஆ..
இருவரும்: திருக்கோவிலே.. ஓடி வா..