menu-iconlogo
logo

Vizhiye Kathai Ezhudhu

logo
เนื้อเพลง

ஆண்: விழியே... கதை எழுது...

கண்ணீரில் எழுதாதே...

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

பெண்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

பெண்: மனதில் வடித்து வைத்த சிலைகள்

அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

மனதில் வடித்து வைத்த சிலைகள்

அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

ஆண்: மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்

வானத்தை யார் மூடக் கூடும்

பெண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்

பெண்: கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

பூஜை யார் செய்வது இந்த

பூவை யார் கொள்வது

ஊமைக்கு வேறேது பாஷை

உள்ளத்தில் ஏதேதோ ஆசை

ஆண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்

ஆண்: தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது

எண்ணத்தில் என்னென்ன தோற்றம்

என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்

பெண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்

ஆண்: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே

இருவர்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்...

Vizhiye Kathai Ezhudhu โดย KJ yesudas/P Susheela – เนื้อเพลง & คัฟเวอร์