menu-iconlogo
logo

Thendralil Aadidum

logo
เนื้อเพลง
தென்றலில் ஆடும் கூந்தலில்

கண்டேன் மழை கொண்ட மேகம்

தென்றலில் ஆடும் கூந்தலில்

கண்டேன் மழை கொண்ட மேகம்

என் தேவதை அமுதம் சிந்திடும்

நேரம் இனி என்ன நாணம்

என் தேவதை அமுதம் சிந்திடும்

நேரம் இனி என்ன நாணம்

இனி என்ன நாணம்

மன்னவன் உங்கள் பொன்னுடல்

அன்றோ இந்திர லோகம்

மன்னவன் உங்கள் பொன்னுடல்

அன்றோ இந்திர லோகம்

அந்தி மாலையில் அந்த மாறனின்

கணையில் ஏன் இந்த வேகம்

ஏன் இந்த வேகம்

தென்றலில் ஆடும் கூந்தலில்

கண்டேன் மழை கொண்ட மேகம்

பாவையுடல் பாற்கடலில்

பள்ளி கொள்ள நான் வரவோ

பாவையுடல் பாற்கடலில்

பள்ளி கொள்ள நான் வரவோ

பனி சிந்தும் கனி கொஞ்சும்

பூவிதழில் தேன் பெறவோ

மாலை வரும் நேரமெல்லாம்

மன்னன் வர பார்த்திருந்தேன்

மாலை வரும் நேரமெல்லாம்

மன்னன் வர பார்த்திருந்தேன்

வழி எங்கும் விழி வைத்து

பார்த்த விழி பூத்திருந்தேன்

தென்றலில் ஆடும் கூந்தலில்

கண்டேன் மழை கொண்ட மேகம்

ஆலிலையின் ஓரத்திலே

மேகலையின் நாதத்திலே

ஆலிலையின் ஓரத்திலே

மேகலையின் நாதத்திலே

இரவென்றும் பகலென்றும்

காதல் மனம் பார்ப்பதுண்டோ

கள்ள விழி மோகத்திலே

துள்ளி வந்த வேகத்திலே

கள்ள விழி மோகத்திலே

துள்ளி வந்த வேகத்திலே

இதழ் சிந்தும் கவி வண்ணம்

காலை வரை கேட்பதுண்டோ

காலை வரை கேட்பதுண்டோ

கற்பகத்து சோலையிலே

பூத்த மலர் நீயல்லவோ

கற்பகத்து சோலையிலே

பூத்த மலர் நீயல்லவோ

விழியென்னும் கரு வண்டு

பாட வந்த பாட்டென்னவோ

காவியத்து நாயகனின்

கட்டழகு மார்பினிலே

சுகமென்ன சுகம் என்று

மோகன பண் பாடியதோ

மோகன பண் பாடியதோ

தென்றலில் ஆடும் கூந்தலில்

கண்டேன் மழை கொண்ட மேகம்

என் தேவதை அமுதம் சிந்திடும்

நேரம் இனி என்ன நாணம்

இனி என்ன நாணம்

Thendralil Aadidum โดย K.J.Jesudas/Vani Jairam – เนื้อเพลง & คัฟเวอร์