பெண் : ஹா... ஹா
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா ஹஹ் ஹா..
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா
நான் இழுத்தரைக்கிற போது
கை பழுத்திருக்குது பாரு
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏன்யா
ஆண் :அம்மியரைப்பது..பொம்பள வேல தாண்டி
பெண் : ஹா
ஆண்: அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏண்டி..
பெண் :ம்க்கும்
ஆண்: அம்மி இழுத்தரைக்கிற போது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏண்டி
பெண் :ஹ்.ஆ...கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா… ஹ்ஹஹ
ஒரு கை புடிக்கணும்
அம்மியரைக்கணும் மாமா . ம்.ம்..
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்
இந்த அழகான பாடலை
பாடி நம்மை மகிழ்வித்த
திரு.மலேசியா வாசுதேவன் அவர்களுக்கும்
திருமதி.S. ஜானகி அவர்களுக்கும் நன்றி
பெண் :நாந்தான் தனியா என்னதான் பண்ணுறது
சோறு கொழம்பு எப்ப தான் பொங்குறது
மாடாட்டம் வேலை செய்ய என்னால ஆவாது
மாமா நீ ஒத்துழைச்சா எம்மேனி நோவாது
ஆளாகி... நான் சமஞ்சபுள்ள
ஆனாலும்.. நான் சமைச்சதில்லை
கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு
ஆண் :அம்மி அரைப்பது …ஏய்..
அம்மி அரைப்பது பொம்பள வேலை தாண்டி....
பெண் :ம்..ஹ்ஹம்
ஆண் :அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏண்டி...
பெண் :மாமா..
ஆண் :அம்மி இழுத்தரைக்கிறபோது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி
பெண் :கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா ஆ..
ஆண் :அம்மா தாயே முடிஞ்சா பாடுபடு
அலுப்பும் சலிப்பும் இருந்தா ஆள விடு
பெண் :பொல்லாத கோவமென்ன கண்ணான ராசாவே
வேணாண்ணு தள்ளி வச்சா ஹ்ஹ..
வாடாதோ ரோசாவே
ஆண் :மானே வா பொய் கோவந்தாண்டி
தேனே வா ஒரு தாபந்தாண்டி
கண்ணே நீ கஷ்டப்பட்டா எம்மனசு தாங்காது
பெண் :கை வலிக்கிது ஹஹ்ஹ..
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஆண் :அட அம்மி அரைச்சிட
நானிருக்கிறேன் வாம்மா
இருவரும்: அட ஒண்ணாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே
ஒண்ணாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே
பெண் :கை வலிக்கல கை வலிக்கல மாமா
ஆண் :ஹா .......
பெண் :ஹஹ்ஹ..
இப்ப..கை வலிக்கல கை வலிக்கல
இருவரும் : ஹஹ் ஹா...ஹஹ் ஹா...