menu-iconlogo
huatong
huatong
avatar

Kaadhal Vandhaal

Manikka Vinayagamhuatong
rolfbertleinhuatong
เนื้อเพลง
บันทึก
Movie : Iyarkai (2003)

Music : Vidyasagar

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்ட வெளியிலே வாடுதடி

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்ட வெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி......

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

Singers : Tippu, Manikka Vinayagam

HQ by

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே

காதலிக்கும் முன்பு

இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே

காதல் வந்த பின்பு

சாவை அழைத்து கடிதம் போட்டேன்

காதலிக்கும் முன்பு

ஒரு சாவைத் தவிர்க்க சக்தி கேட்கிறேன்

காதல் வந்த பின்பு

உன்னால் என் கடல் அலை

உறங்கவே இல்லை

உன்னால் என் நிலவுக்கு

உடல் நலம் இல்லை

கடல் துயில் கொள்வதும்

நிலா குணம் கொள்வதும்

நான் உயிர் வாழ்வதும் உன்

சொல்லில் உள்ளதடி

உன் இறுக்கம் தான் என் உயிரை

கொல்லுதடி கொல்லுதடி…

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

Lyrics : Vairamuthu

HQ by

Search "Venkat HQ" tag for more HQ songs

பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்

உன்னைக் காணும் முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்

உன்னைக் கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான்

கண் திறந்த பின்பு

என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்

உன்னைக் கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை

அதற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை

நான் கரையாவதும்

இல்லை நுரையாவதும்

வளர் பிறையாவதும் உன்

சொல்லில் உள்ளதடி

உன் இறுக்கம் தான் என் உயிரை

கொல்லுதடி கொல்லுதடி…

காதல் வந்தால் சொல்லியனுப்பு

காதல் வந்தால் சொல்லியனுப்பு

சொல்லியனுப்பு

சொல்லியனுப்பு

Please give a like to this HQ track.

เพิ่มเติมจาก Manikka Vinayagam

ดูทั้งหมดlogo